--- --:--:-- --

மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா..!

10

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ராசிகண்ணா சுந்தர் சியுடன் கூட்டணியில் மீண்டும் இணைய உள்ளார். கடந்த 13 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கஃபே இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

 

அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக இருந்தார். தற்பொழுது மேதாவியார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை ராசி கண்ணா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

 

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுந்தர் சி யின் அரண்மனை படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இதனால் தற்போது மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon