வெள்ளப் பாதிப்புகளுக்கு திமுக தான் காரணம் என சசிகலா குற்றச்சாட்டு..!
திமுக ஆட்சிக் காலங்களில் கட்டப்பட்ட பாலங்கள் தான் சென்னையின் வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார் . சென்னை வெள்ளம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆட்சியாளர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்வதால் அதிகாரிகளால் பாதிப்புகளை சரி செய்வதில் கவனம் செலுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்களுக்கு வரைபடம் காட்டி விளக்கம் அளிப்பதில் ஐஏஎஸ் அதிகாரிகள் நேரத்தை செலவிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சிக் காலங்களில் எவ்வித வடிகால் வசதியும் இன்றி தொலைநோக்கு பார்வை இல்லாமல் நகரத்தின் முக்கிய சாலைகளில் கட்டப்பட்டன. பாலங்கள் தான் சென்னையில் வெள்ள பாதிப்புகளுக்கு மிக முக்கிய காரணம் என்று சசிகலா குற்றம்சாட்டினார்.






