--- --:--:-- --

தமிழ்நாட்டில் இன்று ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

8

தமிழ்நாட்டில் இன்று ஏழு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடலோரப் பகுதிகளில் சுமார் 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நவம்பர் 7ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வருகிற 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon