வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை..!
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை ஆட்சியரிடம் ஆலோசனை நடத்துகிறார். வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் மழை பெய்து வருகிறது.
இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியருடன் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.
பருவ மழை தொடர்பாக மாவட்ட அளவில் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த தோடு பல ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






