--- --:--:-- --

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

3

தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளனதீ. பாவளிக்காக திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

சென்னையிலிருந்து மூன்று நாட்களுக்கு மொத்தமாக 3 ஆயிரத்து 806 பேருந்துகளும் திங்கள்கிழமை மட்டும் 2,491 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதை போல 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பயணிகள் திரும்பி வருவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

தனியார் பேருந்துகளை கண்காணிக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் குழு அமைத்து சோதனை செய்யும் நடவடிக்கையில் ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர். சிறப்பு பேருந்துகள் வெவ்வேறு இடங்களிலிருந்து இயக்கப்பட உள்ளன.

 

சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon