ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடிய நடிகை வாணி போஜன்..!
நடிகை வாணி போஜன் சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடினார். தனியார் அறக்கட்டளை சார்பில் தியாகராயநகரில் உள்ள திருமண மண்டபத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை வாணி போஜன், ஈரோடு மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குழந்தைகளுடன் நடனமாடியும் கம்பி, மத்தாப்புகளையும் வைத்து தீபாவளியை கொண்டாடினர்.






