--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இலவச அண்ணாத்த பட டிக்கெட்.!

2

வேலூரில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் அண்ணாத்த பட டிக்கட்டுகளை வழங்கி கவர்ந்தார். வேலூரில் நடைபெற்ற ஏழாவது கொரொனா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.

 

குறிப்பாக காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் பிரமபுரம் ஊராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகையான 7,368 பேரில் இதுவரை 4 ஆயிரத்து 973 பெயர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

 

அனைவரையும் தடுப்பூசி செலுத்த வைக்கும் நோக்கில் ஊராட்சி மன்ற தலைவர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் சிலர் குலுக்கல் சீட்டு முறையை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த பட டிக்கெட்டுகளை வழங்கி கவர்ந்தார்.

 

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 24ஆம் தேதி மாலை 6 மணி காட்சிக்கு படத்தை பார்க்க இருக்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon