காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி வெட்டி படுகொலை..!

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் நேற்றிரவு திருநள்ளாறு கடைவீதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

 

அப்போது தேவமணியை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். உடலில் பல்வேறு இடங்களில் படுகாயத்துடன் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

கொலை சம்பவத்தால் திருநள்ளாரில் பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.