--- --:--:-- --

ஆர்டர் செய்தது ஐ போன்..!வந்தது 5 ரூபாய் சோப்பு..!

7

பிளிப்கார்ட் பில்லியன்டேயில் செல் போன் ஆர்டர் செய்தவருக்கு 5 ரூபாய்க்கு நிர்மா சோப் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனமான பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களை கவர பிக் பில்லியன் டே அறிவித்துள்ளது.

 

இதில் குறைந்த விலையில் கிடைப்பதால் பலரும் போட்டிபோட்டு விருப்பமான பொருட்களை வாங்கி வருகின்றனர். போனை விலை குறைந்த விலையில் ஆர்டர் செய்திருக்கிறார்.

 

சில நாட்களுக்கு முன் டெலிவரி செய்த அதை பிரித்து பார்த்த போது உள்ளே ஐபோனுக்கு பதிலாக வெறும் 500 ரூபாய் மதிப்பிலான நிர்மா சோப் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

ஐபோன் 12 டெலிவரி செய்த நபரின் முன்பே பிரித்து பார்த்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டு பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதன்பிறகு பிலிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை அதிகாரியை தொடர்பு கொண்டு பேசி நடந்த சம்பவத்தை கூறி ஆர்டரை கேன்சல் செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon