--- --:--:-- --

சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளரை திட்டிய நாகசைதன்யா ரசிகர்கள்..!

8

நடிகை சமந்தா உடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட அவரது ஆடை வடிவமைப்பாளரை ரசிகர்கள் பலர் அவதூறாக திட்டி தீர்த்தனர். காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தனர்.

 

இவர்களுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் என்று டோலிவுட்டில் தகவல்கள் வெளியானது. அவருடன் நடிகை சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானதையடுத்து நாகசைதன்யா ரசிகர்கள் அவதூறாக திட்டினர்.

 

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் ஆடை வடிவமைப்பாளர் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon