அரசர் மீண்டும் வந்துவிட்டார் என டிவீட் செய்து தோனியை புகழ்ந்த விராட் கோலி..!
டெல்லி அணியுடனான குவாலிபையர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்த சென்னை கேப்டன் தோனியை பெங்களூரு கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் அரசர் மீண்டும் வந்துவிட்டார் என்றும் கிரிக்கெட் உலகின் ஆகச் சிறந்த பினிஷர் தோனி என்று சிலாகித்துள்ளார். மீண்டும் ஒருமுறை இருக்கையிலிருந்து தோனி தன்னை குதிக்க வைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக தோனியை சிறந்த பினிஷர் என்று டிவீட் செய்த கோலி பின்னர் அந்த ட்வீட்டை நீக்கி விட்டு பின்னர் எப்போதும் அவர்தான் சிறந்த பினிஷர் என்று டுவிட் செய்தார்.






