விவாகரத்துக்கு பின் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை சமந்தா..!
Vishal, Samantha And Others At The Irumbu Thirai Trailer Launch
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா விவாகரத்துக்கு பின் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் .காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்ய உள்ளதாக அண்மையில் அறிவித்தனர்.
இது தென்னிந்திய திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிப்பை வெளியிட்ட பின் தற்போது முதன்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உள்ளார் சமந்தா.
அதன்படி தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆர் நடத்திவரும் உங்களில் யார் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் 25 லட்சம் ரூபாய் வென்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வருகிற 14-ஆம் நாள் ஒளிபரப்பாக உள்ளது.






