--- --:--:-- --

ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக வீராங்கனைக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்..!

13

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இரண்டு விளையாட்டு வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையை முதல்வர் வழங்குகிறார்.

 

ஒலிம்பிக் சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்த நிலையில் அவர்களை உற்சாகப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு அளித்து வருகிறது.

 

அந்த வகையில் ஒலிம்பிக் போட்டியில் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திருச்சி மாவட்ட வீராங்கனைகள் சுபா மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு பணி நியமன ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் வழங்கியுள்ளார். செந்தில் பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon