மீண்டும் நள்ளிரவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் செயலி..!
இன்ஸ்டாகிராம் செயலி நேற்று இரவு திடீரென முடங்கியதால் பயனாளிகள் அவதியுற்றனர். மீண்டும் சேவை முடங்கியதால் இன்ஸ்டாகிராம் நிறுவனம் பயனாளர்களிடம் மன்னிப்பு கோரியது.
பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் பிரச்சினை சரி செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட சிரமத்தை பொறுத்துக் கொண்ட பயனாளிகளுக்கு நன்றி எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகள் 7 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.






