என் கனவு நிறைவேறியது : சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகியாக வலம் வரும் சாக்ஷி அகர்வால் என் கனவு நிறைவேறியது என்று படவிழாவில் தெரிவித்துள்ளார். பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகிகளாக சாக்ஷி அகர்வால், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சாக்ஷி அகர்வால் பிரபுதேவாவிற்கு நான் மிகப்பெரிய ரசிகை என்றும் இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் என் கனவு நிறைவேறியதாகவும் கூறியுள்ளார்.






