40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்..!
விழுப்புரம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். 35 வயதான பிரபாவதி வலையாம்பட்டு கிராமம் செல்லும் வழியில் உள்ள சுற்றுச்சுவர் இல்லாத விவசாய கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் இருந்த பிரபாவதியை மீட்கும் முயற்சியில் தோல்வி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி பெண்ணை பத்திரமாக மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த பிரபாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






