--- --:--:-- --

பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி பலியான மூன்று சிறுவர்கள்..!

2

ரூர் மாவட்டம் புணவசிபட்டி அருகே கட்டுமான பணிக்காக மண் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விளையாடிய மூன்று சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர், நவீன் குமார், மயில்வாகனன் அவருடைய அண்ணன் வசந்த் என்ற மூன்று சிறுவர்களும் பள்ளியில் விடுமுறை என்பதால் அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் சிவலிங்கபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. மண் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon