நிலாவில் நிலம் விற்பனைக்கு என்று பண மோசடி செய்த நபர்..!
நிலாவில் நிலம் விற்பனைக்கு என்று பண மோசடி செய்த நபரை பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி ஒரு வருடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இப்பொழுது நிலவில் நிலம் வாங்கினால் பின்னர் அதனை பெற்று அதிக லாபம் சம்பாதிக்கலாம் என மோசடி நபர் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூகுள் பே மூலம் அந்த நபர் பணம் பெற்ற நிலையில் வங்கி கணக்கை ஆய்வு செய்து போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.






