வேலை கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்ற பெண்..!
மத்திய பிரதேசத்தில் தண்டவாளத்தில் நின்றபடி தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. வேலை கிடைக்காத விரக்தி அடைந்த இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
ரயில்வே கிராசிங்கில் ரயில் வருவது தெரிந்ததும் கேட்டை கடந்து சென்று தண்டவாளத்தின் குறுக்கே நின்றார். அப்போது அந்த வழியே வந்த ஆட்டோ ஓட்டுனர் தன் உயிரை பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் நின்ற பெண்ணை தரதரவென இழுத்து வந்து உள்ளார்.
கேட்டை பற்றியபடி கதறி அழுத அந்தப் பெண்ணுக்கு அங்கிருந்தவர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். அந்தப் பெண் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்காமல் இருக்க அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டுமென நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.






