--- --:--:-- --

பாலத்தில் தேங்கிய மழைநீரில் சிக்கி கொண்ட கல்லூரி பேருந்து..!

7

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அன்மையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட ரயில்வே பாலத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து சிக்கிக்கொண்டது. பேருந்துக்குள் இருந்த 30 மாணவிகள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.

 

வள்ளியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள ரயில்வே பாலத்தில் மழை நீர் தேங்கியது. பாலத்தை கடக்க வேண்டிய தனியார் கல்லூரி பேருந்து தண்ணீரில் சிக்கிக்கொண்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னர் டிராக்டர் உதவியுடன் கல்லூரிப் பேருந்து மீட்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon