10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட வௌவால் மாதிரிகளில் கொரோனா!
கம்போடியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சேகரித்து வைக்கப்பட்ட வவ்வால்களின் மாதிரிகளின் ஆதிமூலத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள் .
இந்த மாதிரிகளில் காணப்படும் வைரசுக்கும் தற்போது உலகையே மிரட்டும் குரானா வைரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கம்போடியா தலைநகரில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த வைரஸ் வனவிலங்குகளை தாக்கி கொரோனா வைரஸ் இருப்பதற்கான எந்த அறிகுறியும் வெளிக்காட்டாது எனவும் ஆனால் அவை நோய்த்தொற்றை தீவிரமாக பரப்பும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
விலங்குகளின் இயற்கையான வாழ்விடங்களை அழிக்கும் மனிதர்களின் இயல்பு காரணமாகவே கொரொனா போன்ற வைரஸ்கள் உருவாவதாகவும் கம்போடிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





