கோவிலில் செய்தியாளர்களிடம் கடுகடுத்த நடிகை சமந்தா..!
புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார். இன்று காலை கோயிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கணவருடன் கருத்து வேறுபாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கோவிலுக்கு வந்த இடத்தில் இதனை பேசுவதா என செய்தியாளர்களிடம் கடுகடுத்துக்கொண்டு நடிகை சமந்தா சென்றதாக சொல்லப்படுகிறது.






