மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்ததாக குற்றச்சாட்டு..!
மதுரையில் மகனின் பல் மருத்துவ பதிவினை கொண்டு மருத்துவம் படிக்காத தந்தை சிகிச்சை கொடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலமாசி வீதியில் செயல்பட்டு வரும் தனியார் பல் மருத்துவமனையில் மருத்துவர் விஸ்வரூபனின் பதிவெண்ணை பயன்படுத்தி அவரது தந்தை பொன்ராஜ் மருத்துவம் பார்ப்பதாக அங்கு சிகிச்சைக்கு வந்த வெங்கடேசன் என்பவர் சில வீடியோ காட்சிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக மாநகர காவல் விசாரிக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். இந்த நிலையில் மருத்துவரிடம் தொலைபேசி மூலமாக கேட்டபோது தனது தந்தை பல் சிகிச்சை பார்க்கவில்லை என்றும் செயற்கை பல் அளவிடும் பணி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை கவனித்துக்கொள்கிறார் எனவும் கூறினார்.






