--- --:--:-- --

கோவாக்ஸின் தடுப்பூசிக்கு விரைவில் அங்கீகாரம் வழங்கப்படும்..!

10

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கொரொனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் விரைவில் அங்கீகாரம் வழங்க இருப்பதாகதகவல்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

 

எனினும் உலக சுகாதார நிறுவனம் இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை.இதனால் கோவாக்ஸின் தடுப்பூசியைதடுப்பூசி செலுத்தியவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.

 

இந்த சூழலில் கோவாக்ஸின் தயாரிக்கும் நிறுவனம் கூடுதல் பரிசோதனை விவரங்களை உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது. எனவே இந்த வாரத்திற்குள் கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கிகாரம் அளிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon