--- --:--:-- --

17 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

5

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக போக்ஸோ சட்டத்தின் கீழ் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் 19 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.

 

அங்கு பெட்ரோல் போட சென்ற 7 வயது சிறுவனிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

 

இரண்டு நாட்களுக்கு முன் சிறுவனுக்கு குடலிறக்க மருத்துவம் செய்ய மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடைய அங்கு சென்ற சிறுமி சிறுவனை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

வீட்டிற்கு சென்று சிறுவனின் பெற்றோர் விசாரித்தபோது தான் திருமணம் செய்ததை தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து அந்த பெண்ணை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon