பாகிஸ்தானுடன் ரகசிய உடன்பாடு வைத்துள்ள தாலிபன்கள்?
காஷ்மீர் விவகாரத்தில் தங்களுடன் தாலிபன்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று பாகிஸ்தான் ஆளும் கட்சி தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அவர் தாலிபன்கள் காஷ்மீர் விவகாரத்தில் உதவுவதாக உறுதி அளித்து இருப்பதாக கூறினார்.
தாலிபன்களுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள ரகசிய உடன்பாட்டின்படி இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தவும் பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் பாகிஸ்தான் ஆளும் கட்சி அம்பலப்படுத்தியுள்ளது.






