--- --:--:-- --

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தெலுங்கானாவில் பள்ளிகள் திறப்பு..!

2

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரொனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் முன்னதாக தெலுங்கானாவில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

 

தற்போது தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வரும் செப்டம்பர் 1ஆம் நாள் முதல் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு அந்த மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon