பள்ளிக்கு சென்ற 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று..!
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மணிபண்டல் பகுதியில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பயிலும் 9 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்கள் யாருக்கேனும் கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






