3டி ஓவிய போட்டியில் 4 வயது சிறுமி முதல் பரிசு..!
3டி தொழில்நுட்பத்தில் நடைபெற்ற ஓவிய போட்டியில் 4 வயது சிறுமி முதல் பரிசு பெற்றார். இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பிடித்துள்ளார்.
தேனி திட்ட சாலையில் வசிக்கும் கவிதா என்பவரின் 4 வயது மகள் யாழினி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
நான்கு வயது சிறுவர் சிறுமிகளுக்கு நிலப்பகுதி வரைபடங்களை காட்சிப்படுத்துதல் என்ற தலைப்பில் 3 டி தொழில்நுட்பத்தில் ஓவியப் போட்டியை இந்திய நிறுவனம் நடத்தியது. இந்த போட்டியில் பங்கேற்று தமிழகத்தில் தேனியை சேர்ந்த சிறுமி முதல் பரிசை பெற்றுள்ளார்.






