--- --:--:-- --

மாஞ்சா நூல் அறுத்தத்தில் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதி..!

8

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்தத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எண்ணூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பரத்குமார் நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு தன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

 

அப்போது திடீரென வந்து அவரின் மீது நூல் விழுந்தது. நிலைகுலைந்து போன அவர் கீழே விழுந்துள்ளார். அப்பொழுது அவரின் கழுத்தை அறுத்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

அங்கு அவருக்கு 14 தையல்கள் போடப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். இதனிடையே எழுந்துள்ளதால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் இளைஞர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon