6 மாதங்களுக்குப் பிறகு அனைத்து மருத்துவக் கல்லூரிகள் திறப்பு..!
தமிழகம் முழுவதும் 6 மாதங்களுக்குப் பிறகு அனைத்து மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
கொரொனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பிறப்பு மாணவர்களுக்கான கல்லூரிகளை திறக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தர விட்டது.
அதன்படி சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மதுரை அரசு மருத்துவ கல்லூரி, திருச்சி கே விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டன. நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வகுப்புகள் நடத்தப்படுகின்றன.






