--- --:--:-- --

செப்டம்பர் முதல் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தேசம்..!

1

9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் முதல் பள்ளிகளை திறக்க பிடித்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கை இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

செப்டம்பர் மாதத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை 50% மாணவர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மருத்துவக் கல்லூரிகள் செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில்அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மீன் இறைச்சி, சந்தைகளில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் தனித்தனி கடை குறித்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீடிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon