நடிகர் சிம்பு நடித்துள்ள புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு..!
நடிகர் சிம்பு நடித்துள்ள புதிய படம் ஒன்றில் டைட்டிலில் பள்ளி மாணவன் போல அசத்தும் சிம்புவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விண்ணை தாண்டி வருவாயா படத்தின் வெற்றியின் மூலம் இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் நடிகர் சிம்புவின் கூட்டணியை ஒவ்வொரு முறையும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம்.
இந்த நிலையில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் இருவரும் மீண்டும் இணைகின்றனர். இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அவர் அடையாளமே தெரியாமல் பள்ளி மாணவன் போல் காட்சியளிக்கும் லுக்கை அனைவரும் ரசித்து வருகின்றனர்.






