--- --:--:-- --

மனைவி மீது சந்தேகப்பட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை..!

2

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கட்டிய மனைவி மீது சந்தேகப்பட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். பழைய கோட்டையை சேர்ந்த முருகனும் அவரது மனைவி பூங்கொடியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்று விட்டு திரும்பிய பூங்கொடியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் மிதந்த பூங்கொடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முருகனை போலீசார் கைது செய்தனர்.

 

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தன்னைப் பிரிந்து வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளதாக கூறி அரிவாளால் வெட்டியதாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon