--- --:--:-- --

அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்யும் நடிகை அஞ்சலி..!

3

நடிகை அஞ்சலி அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

ராம் இயக்கிய கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை அஞ்சலி. அதன்பின் அவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தார்.

 

இந்த நிலையில் யோகா பயின்று வரும் அஞ்சலி தற்போது அந்தரத்தில் தொங்கியவாறு பதிவிட்டுள்ள அசத்தலான யோகா புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

 

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் ஏற்று நடித்து பாராட்டுக்களைப் பெற்று வரும் இவர் சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக இருப்பார்.

 

அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அஞ்சலி இப்பொழுது அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்து அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்று வர அவை வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon