--- --:--:-- --

கூட்டத்திலிருந்து பிரிந்து தவிக்கும் திமிங்கல குட்டி..!

3

நியூஸிலாந்து கடல் பகுதியில் கூட்டத்திலிருந்து பிரிந்து திமிங்கல குட்டியை தன் குடும்பத்துடன் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

அத்துடன் கடல் பகுதியில் வழிதவறி கற்களுக்கு இடையே காயங்களுடன் சிக்கிய ஆறு மாத குட்டியை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். குடும்பத்தை பிரிந்து தவித்து வரும் குட்டியை தன் குடும்பத்துடன் சேர்க்க அரசு துறைகளுடன் இணைந்து ஆர்வலர்கள் முயன்று வருகின்றனர்.

 

முயற்சி பயனளிக்கவில்லை என்றால் அந்த குட்டியை கருணைக் கொலை செய்யும் திட்டத்தையும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon