பெண் குழந்தையை தாயே அடித்துக் கொன்ற சம்பவம்..!
நாமக்கல் அருகே மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற தாய் அந்தக் குழந்தையை அடித்து கொலை செய்து நாடகமாடிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்த இரும்பு பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு ஆறு வயதில் நான்கு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதன்பின் கடந்த ஆண்டு மீண்டும் கர்ப்பமாகி கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் நாளன்று பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஏப்ரல் 13 அன்று அதிகாலை குழந்தை இறந்துவிட்டதாக கூறி சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.
இதை தொடர்ந்து குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக மருத்துவர்கள் போலீசில் புகார் எழுந்ததையடுத்து புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வின் முடிவில் குழந்தையின் தலை பலமாகத் தாக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து கஸ்தூரியிடம் போலீசார் மேற்கொண்டனர்.
விசாரணையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் பிறந்து 10 நாட்களே ஆன தனது குழந்தையை தானே அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கஸ்தூரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




