--- --:--:-- --

கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..!

6

கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கையும் களவுமாக பிடிபட்டார். துடியலூர் வட மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

 

அதில் கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைப்பது குறித்து கேரளாவை சேர்ந்த இருவர் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ரயில் நிலையத்திற்கு ரயில்வே பாதுகாப்புப் படையின் வெடிகுண்டு கண்காணிப்புத் துறை போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

 

பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து செந்தில் குமாரை பிடித்து விசாரித்ததில் கொரோனாவால் மனைவியை இழந்த அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் இந்த செயலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon