--- --:--:-- --

ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..!

5

ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

 

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட கடன்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்கள் பொழுதுபோக்கு விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் கல்லூரிகள் உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றிற்கு தடை தொடரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நோய் கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டும் இறுதி சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon