முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக்குவிப்பு புகார்..!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மூன்றாவது நீதிபதி முன்பாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெற உள்ளது. தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதற்கு 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
இதனால் இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கு தொடர்பான ஆவணங்களை அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் இறுதி வாதங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரிப்பதாக கூறி நீதிபதி ஒத்திவைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




