4 திருமணங்களை செய்து ஏமாற்றிய பெண்..!
ராமநாதபுரத்தில் 4 திருமணங்களை செய்து விட்டு ஏமாற்றியதோடு முன்னாள் அமைச்சர்களை எல்லாம் உறவினர்கள் என்று கூறி பண மோசடி செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூரை சேர்ந்த சௌமியா என்பவர் கணவரை பிரிந்து அரூரை சேர்ந்த சக்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அதை மறைத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவல்துறை பிரிவை சேர்ந்த காவல்துறை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.
அப்போது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சிறு பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினருடன் பல லட்சம் ரூபாய் பணம், 64 சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
பண பரிமாற்றத்திற்கு காவலர் சுரேஷின் வங்கிக் கணக்கை பயன்படுத்திய சௌமியா பின்னர் தலைமறைவாகி சேலத்தில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து இருக்கிறார். இதற்கிடையில் பணத்தை இழந்தவர்கள் சௌமியா குறித்து ராமநாதபுரம் காவல்துறையில் புகார் அளித்தனர்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக அமைச்சரின் புகைப்படங்களை வீட்டில் மாட்டி வைத்து அவர்கள் எல்லாம் தங்கள் உறவினர்கள் என சௌமியா கூறியதால் அரசு வேலை கிடைக்கும் என நம்பி பணம் கொடுத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியிருந்தார். சேலத்திலிருந்த சௌமியாவையும் அவருக்கு உதவிய சதீஷ் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.






