வெள்ளம் சூழ்ந்ததால் படகிலேயே நடைபெற்ற திருமண ஊர்வலம்..!
பீகார் மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பாகமதி ஆற்றில் வெள்ளம் பெருகியதால் திருமண ஜோடி படகிலேயே ஊருக்குள் ஊர்வலம் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்டி பூரில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கோபர்சித்தா என்ற கிராமத்தில் ஊரை கடப்பதற்கு படகு தேவைப்படுகிறது.
மேலும் திருமணம் முடித்த கையோடு மணமக்கள் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இதில் திருமணம் முடித்த ஜோடி ஒன்று வேறு வழியில்லாமல் படகிலேயே ஊர்வலம் சென்று திரும்பியது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.






