--- --:--:-- --

திரையரங்குகள் திறப்பு எப்போது..?

2

ரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளை திறக்க தயார் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரொனா நிவாரண தொகையாக 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கியதாக கூறினார்.

 

மேலும் திரையரங்கு உரிமையாளர்களின் சிரமத்தை எடுத்துக் கூறியதாக தெரிவித்த அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியதாகவும் திரையரங்கை திறக்க விரைவில் அனுமதி அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளை திறக்க தயாராக உள்ளதாக கூறினார் சுப்பிரமணியன்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon