தவறுதலாக பிளீச்சிங் பவுடரை சாப்பிட்ட 5 வயது சிறுமி..!
தென்காசியில் தவறுதலாக பிளீச்சிங் பவுடரை சாப்பிட்டு 5 வயது சிறுமி உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளார். சீதாராமன் பிரேமா தம்பதியின் 5 வயது மகள் இசக்கியம்மாள்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன் வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை தவறுதலாக உண்டு விட்டதாக தெரிகிறது. நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு உடல் சுருங்கி உணவருந்த முடியாத நிலை ஏற்பட்டு பின்னர் மிகவும் அவதியடைந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமியின் மேல் சிகிச்சைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த சிறுமியின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் கேட்டபோது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிறுமிக்கு உணவுக் குழாயில் மூன்று இடங்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.






