வணிக வளாகத்தில் பதுங்கியிருந்த 12 அடி நீள மலைப்பாம்பு..!
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் பதுங்கியிருந்த 12 அடி நீளமலைப்பாம்பு பத்திரமாக பிடிபட்டது. கேரா என்ற பெயர்கொண்ட பர்மிய வகையை சேர்ந்த மலைப்பாம்பு 48 மணி நேரத்திற்கு முன்பாக மிருகக்காட்சி சாலையில் இருந்து காணாமல் போனது.
இதனையடுத்து பாம்புபிடி வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஒரு இடத்தில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்து பத்திரமாக காட்டில் விட்டுள்ளனர்.






