--- --:--:-- --

மீன்வளத்துறை அமைச்சரை இடுப்பில் தூக்கி சென்ற மீனவர்..!

5

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கி சென்று கரையில் இறக்கி விட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட பழவேற்காட்டில் ஆய்வு மேற்கொள்ள வந்த போது படகிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கி சென்று கரை சேர்த்துள்ளார்.

 

ஏரியில் மண் அரிப்பு ஏற்படுவது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் எம்எல்ஏ ஆய்வு செய்தனர். அப்போது 7 பேர் பயணிக்கக்கூடிய படகில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இது ஒரு புறமாக சாய தொடங்கியதால் படகில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர்.

 

இதையடுத்து அமைச்சர் பயணித்த படகில் இருந்த சிலர் ஒரு படகில் ஏறினர். அதன் பின்னர் முகத்துவாரம் பகுதியில் ஆய்வை முடித்துக் கொண்டு வந்த அமைச்சரை மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கி சென்று சேர்த்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon