கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மிழகத்தில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

 

இதை தொடர்ந்து பேசியவர் வழிகாட்டுதலின்படி இந்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வின் போது செய்தியாளரிடம் பேசிய சுப்பிரமணியன் கர்ப்பிணிகள் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் முதன் முறையாக அனுமதி வழங்கியுள்ளது.

 

தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில்நுட்ப வளர்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் முடிவு குறித்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து இருந்தது.

 

அதன்படி தமிழகத்தில் ஒரு கோடியே 52 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திள்ளதாகவும் பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.


Leave a Reply