தன் முகம் அழகாக இல்லை எனக் கூறி மாணவன் தற்கொலை..!
கும்பகோணம் அருகே தன் முகம் அழகாக இல்லை எனக் கூறி பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோழபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சங்கர் என்பவரின் மகன் வேந்தன்.
இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் தான் அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது.
இதனால் தான் தன்னிடம் இளம் பெண்கள் யாரும் பேச முன்வருவதில்லை தன்னுடைய நண்பர்களிடம் கூறி வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன அழுத்தத்தில் இருந்து அவன் சுடுகாட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




