நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி..!
கள்ளக்குறிச்சியில் நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி ஒன்று தாய் பசுவிடம் பால் குடிக்க முடியாமல் தவித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன் .
இவர் வளர்த்து வரும் பசு கன்று ஈன்ற.து பொதுவாக பசுக்கள் கன்று ஈன்றதும் சில நொடிகளிலேயே அந்த கன்று குட்டிகள் தட்டுத்தடுமாறி எழுந்து நடக்கத் தொடங்கிவிடும் . அதன்பிறகு துள்ளிக் குதித்து ஓடத் துவங்கும்.
சில நாட்களில் அந்த கன்றுக்குட்டி கட்டி வைக்க முடியாத அளவிற்கு சந்தோஷமாக அங்குமிங்கும் தெருக்களில் ஓடும் .ஆனால் ராஜேந்திரனின் பசு ஈன்றுள்ள கன்றுக்கு நான்கு கால்களும் இல்லை.
அதனால் எழுந்து தன் தாயின் மடியில் சுரக்கும் பாலை கூட குடிக்க முடியாத நிலையில் படுத்தபடியே உள்ளது. இந்த கன்று குட்டியை கவலையோடு பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.






