--- --:--:-- --

மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பா..?

10

ரும் 28ஆம் தேதி காலையுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

 

தமிழகத்தில் கொரொனா அதிகரித்த நிலையில் மாநிலம் முழுவதும் மே 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

 

ஊரடங்கு வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 6வது முறையாக ஊரடங்கு உத்தரவு தொடர்பாகவும் கூடுதல் தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

 

மருத்துவர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 

4 மாவட்டங்களில் மட்டும் தற்போது பேருந்து போக்குவரத்து உள்ள நிலையில் மேலும் 23 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க அனுமதி, சிறிய கோவில்கள், பெரிய துணிக்கடைகள், நகை கடைகள் திறக்க அனுமதி உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon